தேனி அருகே கோடாங்கி பட்டி சமுதாயக்கூடம் குப்பை கூடமாக மாறிய அவல நிலை!!!

தேனி மாவட்டம் போடி யூனியனுக்கு உட்பட்ட கோடாங்கிபட்டி கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சமுதாய கூடம் திறந்து வைக்கப்பட்டது மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த சமுதாயக்கூடம் எவ்வித பராமரிப்பு இன்றி உள்ளே குப்பை மற்றும் தேவையில்லாத பொருட்கள் மூட்டை மூட்டையாக குவிந்து கிடைக்கிறது சமுதாயகூடம் அருகில் முட்புதர்கள் புதர் மண்டி கிடைக்கிறது இதனால் அந்த பகுதியில் பாம்புகள் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது இதனால் பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் மிகவும் அச்சத்துடனே அப்பகுதியில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிக அளவில் அந்தப் பகுதியில் செல்வதால் பயந்து பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது ஆகவே தேனி மாவட்ட நிர்வாகமும் போடி யூனியன் நிர்வாகமும் இணைந்து அந்த சமுதாயக் கூடத்தை அவ்விடத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும் எனவும் அல்லது அதை சுத்தப்படுத்தி சுகாதார முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருகிறது எனவே இந்த சமுதாயக்கூடத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அங்கு உள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து எறிந்து விட்டு அப்பகுதி உள்ள முட்புதர்களை சுத்தம் செய்து மக்கள் பயமின்றி வசிக்க கூடிய பகுதியாக மாற்றித் தரவேண்டும் என நம்மிடம் கூறியுள்ளார் இந்த செய்தியை பார்த்த பிறகாவது மாவட்ட நிர்வாகம் அலட்சிய போக்கை கைவிட்டு அந்த சமுதாயக்கூடத்தை பழைய நிலையில் கொண்டு வந்து அருகில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்து பொதுமக்கள் அச்சமின்றி செல்லவும் மாணவர்கள் அச்சமின்றி செல்லவும் வழி வகை செய்வார்கள் எனசமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.