திருப்பூர் மாவட்டத்தில் குட்கா , கூல் லீப் விற்பனை தாராளம் மாமூல் மழையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள கிருஷ்ணா பேக்கிரியில் டீ போடும் அறையில் பகிரங்கமாக, தைரியமாக குட்கா ஹான்ஸ் ,கூல் லீப் போன்ற போதை பொருட்கள் விற்கப்படுகிறது. 60 ,70 என்ற கோடு வேர்டில் ரெகுலராக வரும் பரிச்சயமான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது . புதிதாக வரும் அவர்களுக்கு கொடுப்பதில்லை ‌ . சில நாட்களுக்கு முன்புதான் இந்த பேக்கரி முன் இருந்த பெட்டிக்கடையில் குட்கா விற்பதாக வழக்கு போடப்பட்டுள்ளது அதையும் மீறி தொடர்ந்து விற்க காரணம் அதிகப்படியான லாபமே. ஆனால் வாங்கும் நபர்கள் பெரும்பாலும் 15 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் ஆவார்கள். படிப்பு முடித்து நல்ல நிலையில் சமுதாயத்தில் வர வேண்டிய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கும் போதை பொருட்களுக்கு அடிமையாகி புத்தி இழந்து வாழ்க்கை தொலைத்துக் கொண்டிருப்பது பரிதாபமாக உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தால் மாமுல் அதிகம் தரும் நபர்கள் கடை என்றால் முன்கூட்டியே தகவல் சொல்லி சென்று சோதனை செய்து ஒன்றுமே சிக்கவில்லை என்று கையை விரித்து விடுவார்கள் . பெட்டிக்கடை என்றால் சிறிய வழக்கு மட்டும் போட்டு முடித்து விடுவார்கள் உரிமையாளர் யார் என்று கூட வெளியே தெரியாது. காரணம் மாதமானால் வரும் பெரிய மாமுல்தான். திருப்பூர் மாவட்ட முழுவதும் கஞ்சா, கூல்லீப் , ஹான்ஸ்,குட்கா , போதை சாக்லேட் போன்ற போதை வாஸ்துகள் சர்வசாதாரணமாக பெட்டிக்கடை, அரசு டாஸ்மாக் பார், பேக்கரி ஆகியவற்றில் தாராளமாக விற்பனையாகிறது. இது குறித்து செய்தி வெளியிட்டால் . நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் போதை வாஸ்து விற்கும் சமூக விரோதிகளிடம் சென்று பேரம் பேசி ஒரு பெரிய தொகை வாங்கி விட்டு. தொடர்ந்து செய்தி வருவதை தடை செய்ய செய்தி வெளியிடும் நிருபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என அழுத்தம் கொடுப்பதும். நான் உங்கள் உடன் இருக்கிறேன் என்று தங்கமான திருப்பூர் மாநகர உணவு பாதுகாப்பு அதிகாரி தைரியம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருடனுக்கு காவலாக இருக்கும் அதிகாரிகளை பார்க்கும் பொழுது பாலுக்கு பூனையை காவல் வைத்தது போல் இருக்கிறது . இது போன்ற லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? இந்தப் போதை பொருள் விற்கும் கும்பல் உடன் தமிழக ஆளுங்கட்சிக்கு பங்கு உள்ளதா? தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்திலும் மௌனம் காப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.