சென்னை மடிப்பாக்கத்தில் கென்னடி'ஸ் சரஸ்வதி பல்நோக்கு மருத்துவமனயை அமைச்சர் த.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்!!!
சென்னை மடிப்பாக்கத்தில் கென்னடி'ஸ் சரஸ்வதி பல்நோக்கு மருத்துவமனயை அமைச்சர் த.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்!!!
விழாவிற்கு வருகை தந்தோரை மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜே. கே. பிரகாஷ் மற்றும் திருமதி பிரகாஷ் வரவேற்றனர். விழாவில் வரவேற்று பேசிய டாக்டர் ஜே. கே. பிரகாஷ். மருத்துவனைக்கு வருகை தரும் கிட்னி நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குப் பிறகு அதற்கான ஏற்பாடு முழுமை பெறும். டயாலிசிஸ் செய்ய விரும்புவோர் எங்கள் மருத்துவமனையில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றார்.விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த தமிழக மாநில தலைவர் டாக்டர் கே. எம். அப்துல் ஹசன், முன்னாள் குடும்ப நலத்துறை அதிகாரி டாக்டர் ஏ. விஸ்வநாதன், மூவரசம்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.