புளியம்பட்டி நகராட்சி 11 வது வார்டு பகுதியில் மின்சாரம் சப்ளை குறைவால் மின்விளக்கு, டிவி, ஃபேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடையும் நிலைமை.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதி சருகு மாரியம்மன் கோவில் வீதி, பட்டக்கார தெரு, நம்பியூர் ரோடு, போன்ற குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இப்பகுதிகளில் மின்சாரம் சரிவர வராமல் அடிக்கடி மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுகிறது இதில் கடந்த ஏழு நாட்களாக மின்சாரம் சரியாக வராமல் சப்ளை குறைந்துள்ளது, வோல்டேஜ் குறைவால் வீடுகளில் உள்ள மின்விளக்கு,மின்விசிறி, டிவி, மிக்ஸி, பிரிட்ஜ், கிரைண்டர், உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு வருகிறது, இது குறித்து சரி செய்து கொடுக்கும்படி மின்சார அதிகாரிகள் மற்றும் மின் பணியாளர்களிடம் பலமுறை தெரிவித்தும், நேரில் வரச் சொல்லி காண்பித்தோம் அவர்கள் மின்கம்பம், மீட்டர் பாக்ஸை ,பார்த்துக் கொண்டு போனார்களே தவிர மின்சாரம் சப்ளை குறைவதை சரி செய்வதற்கு உண்டான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர், மேலும் புளியம்பட்டி பகுதியில் மின்சாரம் குறித்த பிரச்சினைகளை உடனே சரி செய்யாமல் மின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தாமதம் காட்டி வருகின்றனர், மேலும் மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளார்கள் ஆனால் சரியாக மின்சாரம் வழங்குவதில்லை, எனவே மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்