தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 14 -வது ஆண்டு விழா நடைபெற்றது!!!

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் .ராஜமோகன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். இவ்விழாவில் திரைப்பட நடிகையும், செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார். மாணவிகள் தங்களுடைய கல்லூரி படிப்பினை முடித்தவுடன் பணிகளுக்கு சென்று தங்களுடைய குடும்ப நிதிநிலையை தன்னிறைவு பெறச்செய்யவேண்டுமென்றும், சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த துணைபுரிய வேண்டுமென்றும், கல்லூரியில் படிக்கும் பெழுது மாணவ மாணவிகள் நேர்மறை எண்ணங்களை வளர்த்து பெற்றோர் மற்றம் ஆசிரியர்களின் அனுபவங்களின் மூலம் இலட்சியத்தை அடைய வேண்டுமென்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் விண்வெளி வீரங்கானை மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர் செல்வி உதய்கீர்த்திகா அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் மாணவர்கள் தங்களது துறைகளில் தனித்துவம் பெறவேண்டுமென்றும், கிராமப்புற மாணவர்கள் கல்லூரியில் கிடைக்கும் வேலைவாய்ப்பினை சரியாக பயன்படுத்தி சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமென்றும், சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் தங்கள் துறை சார்ந்த அறிவனை பெற்று வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பினை பெற முடியுமென்றும் சிறப்புரையாற்றினார்.