தேனி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 36 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற ஹாக்கத்தான் போட்டி!

தேனி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 36 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற ஹாக்கத்தான் போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர். ரயில் தண்டவாளங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் முன்கூட்டியே கண்டுபிடித்து ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் விபத்தை தடுக்கலாம் என மாணவர்கள் தெரிவித்தனர். தேனி அருகே வடபுதுபட்டியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது பொறியியல் கல்லூரியில் பயிலும் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல், உள்ளிட்ட துறைகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதில் உள்ள தீர்வுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏ. ஐ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு போக்குவரத்து விபத்துகளை முன்கூட்டியே அறிந்து அதனை தடுக்கவும், விவசாய சார்ந்த பொருட்கள் மூலம் மக்களின் நோய்களை குறைக்க உணவுகளை தயார் செய்வது என பல்வேறு கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவி விஷ்ணு பிரியா கூறுகையில் ரயில் தண்டவாளங்களில் உள்ள விரிசல்களை ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் முன்கூட்டியே அறிந்து ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் விபத்துக்களை தடுக்கும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர். மேலும் மாணவி கீர்த்தனா கூறுகையில் விவசாய பொருட்களின் கழிவுகளில் வீணாக்காமல் அதனை பயன்படுத்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டோம், அவகேடோ பழத்தில் இருந்து வீணாக செல்லும் விதையை வைத்து டி பவுடர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் இந்த டீ பவுடர் மூலம் புற்றுநோய் பாதிப்பு மற்றும் டயாபட்டிக் நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர். இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் கூறுகையில் பொதுமக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த தலைப்புகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் வகையில் ஹேக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம் இன்று காலை தொடங்கும் இந்த போட்டி நாளை இரவு 7 மணி வரை இடைவிடாமல் 36 மணி நேரம் நடைபெறும். இந்தப் போட்டியில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் அலுவலர்கள் கண்காணிப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது டெஸ்லா நிறுவனத்தின் மூத்த வடிவமைப்பாளர் இந்த போட்டியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த போட்டிகளின் மூலம் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.