திருப்பூர் மாநகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை மழைநீர் வடிகாலில் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!
திருப்பூர் மாநகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை மழைநீர் வடிகாலில் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!
திருப்பூர் மாநகராட்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோர் உத்தரவின் பேரில் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 60 வார்டுகளிலும் மழைக்காலம் தொடங்கும் முன்பே மழை நீர் வடிகால், கழிவுநீர் வடிகால் ஆகியவற்றில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கவர் ,கண்ணாடி பாட்டில்கள் போன்ற கழிவுகள் அகற்றும் பணி தீவிரப் படுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் 49 வார்டு வள்ளியம்மை நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட மழைநீர் வடிகாலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. பணிகளை உதவி ஆணையாளர் வினோத் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கினார் , பொதுமக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பைகளை வாங்க வரும் தொழிலாளிகளிடம் வழங்கும்படியும் மழை நீர் வடிகால், கழிவு நீர் வடிகாலில் பிளாஸ்டிக் கவர், கண்ணாடி பாட்டில்கள், கழிவுகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களே வலியுறுத்தினார்கள். சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், தங்கமுத்து , சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.