குப்பையை மீண்டும் கடை முன்பு கொண்டு வந்து போட்டுச் சென்ற மாநகராட்சி பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்
குப்பையை மீண்டும் கடை முன்பு கொண்டு வந்து போட்டுச் சென்ற மாநகராட்சி பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 53 உட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் உள்ள சோபா செட் பழுது பார்க்கும் கடை உள்ளது இந்த கடையில் உள்ள கிழிந்து சோபா செட் துணிகள் ஆகியவற்றை அப்பகுதியில் வழக்கமாக பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் கடந்த ஞாயிறன்று கடை உரிமையாளர் போட்டுவிட்டு வந்துள்ளார் பின்னர் ஞாயிற்றுக்கிழமை கடை விடுமுறை திங்கள்கிழமை காலை கடை திறக்க வரும்பொழுது கடை முன்பு அவர் வழக்கமாக குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்பட்ட சோபா செட் துணிகள் அனைத்தும் தனது கடையின் கதவு முன்புறம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனால் கடை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது இது குறித்து விசாரிக்கையில் திங்கட்கிழமை காலை அந்த பகுதி வார்டு கவுன்சிலர் குப்பை எடுத்து அக்கடை முன்பு மீண்டும் போட்டு விட்டு வருமாறு தெரிவித்ததாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் குப்பையை எடுத்துச் செல்லாமல் மீண்டும் அக்கடை முன்பு கொட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மீண்டும் இந்த குப்பையை அகற்ற வேண்டுமானால் 2000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே எடுப்போம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர் இதனால் அந்த குப்பை சாலையில் மூன்று நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது இவ்வாறு வழக்கமாக குப்பை போடும் இடத்தில் கொட்டப்பட்ட குப்பையை மீண்டும் கடை முன்பு கொண்டு வந்து போட்டுச் சென்ற மாநகராட்சி பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதேபோல சின்னச்சாமி லே அவுட் நியாயவிலைக் கடை முன்பு உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரின் வீட்டின் முகப்பில் உள்ள சாய்வு தளத்தை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மாநகராட்சி ஊழியர்கள் உடந்தையடன் இடித்து அப்புறப்படுத்தி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர் இப்பகுதி வார்டு உறுப்பினர் இந்த வார்டில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் அதற்கு மாநகராட்சி ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர் என்று இப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.