திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டு அடிப்படை வசதி இல்லாமல் அல்லல்படும் பொதுமக்கள்

திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டு பாண்டியன் நகர் சௌடேசம்மன் கோவில் தெரு வடக்கு வீதியில் மிகவும் பள்ளமாக இருப்பதால் அந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கிடையாது . பாண்டியன் நகர் முழுவதும் பல இடங்களில் புதிய சாலை போட்டும் இங்கு சாலை போடவில்லை எந்தவித அடிப்படை வசதியும் இதுவரை கவுன்சிலர் மாலதி செய்து தரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் . வீதியில் கழிவுநீர் வடிகால் இன்றி சாக்கடை தண்ணீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கி கிடைக்கிறது . சாலை போடாததால் வீதிகள் குண்டும் குழியுமாக மரண கிணறாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழை காலம் தொடங்குவதால் மேலும் அதிகளவு கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளார்கள் . எனவே திமுக கவுன்சிலர் மாலதி இதை பற்றி கண்டு கொள்ளவில்லை மேயர் தினேஷ்குமார் ஆவது உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.