தமிழ்நாடு கண் மருத்துவ சங்கம் நடத்திய "சென் ஐ கான்-2024" கண்காட்சி!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக கண்காட்சி மையத்தில் தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் வருடாந்திர மாநாடு மற்றும் "சென் ஐ கான்-2024", கண்காட்சி ஆகஸ்ட் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. கண்காட்சியினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அரங்கில் கண் சிகிச்சை சம்பந்தமான பல்வேறு நவீன மருத்துவ இயந்திரங்கள், மருத்துவம் சார்பு நிறுவனங்கள் 125 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியில் கண் சம்பந்தப்பட்ட நோய்களான க்ளூகோமா, நீரிழிவு ரெட்டினோபதி, ஆஸ்டிஜி மாடிசம், ஆம்ப்லியோபியா, கார்னியல் சிராய்ப்பு, உலர் கண்கள், கருவிழி அறுவை சிகிச்சை, கருவிழி புண், கண் சதை வளர்ச்சி, லேசிக், கண் ஒவ்வாமை, சோர்வுற்ற கண், இமைத் தொய்வு, விழித்திரை புற்றுநோய், விழிப்புள்ளி சிதைவு மற்றும் கண் நீர் அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வல்ல இயந்திரங்கள், உபகரணங்கள், மருந்துகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது சிறப்பம்சமாகும் என மருத்துவர்கள் பாராட்டினர். கண்காட்சியில் உலகெங்கிலும் இருந்து சுமார் 2500 மருத்துவர்கள் பார்வையிட்டு தங்கள் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் பற்றிய விவர சேகரிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.