சென்னை நாராயணா பள்ளிக் குழும நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி!

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் உலக சாதனை திருவிழா 2024 நடைபெற்றது. பள்ளியின் மாணவ- மாணவிகள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து ஆளுக்கு ஒரு திருக்குறளை சொல்ல வைத்து உலக சாதனை நிகழ்த்தினர். ஏற்கனவே ஒரு மாணவர் சொன்ன குரல் திரும்பவும் வராமல் ஒப்புவித்த செயல் கண்டு சிறப்பு விருந்தினர்கள் வியந்தனர். நீளமான மாரத்தான் திருக்குறள் ஒப்பித்தல் என்னும் இந்த அரிய சாதனை வரலாற்றில் பதிவு செய்யத்தக்கது. எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு அங்கீகாரம் வழங்கியது. மேற்கண்ட அமைப்புகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்தனர். நாராயணா பள்ளிக் குழும நிறுவனங்களின் இயக்குனர் பொன் குரு சரணி உள்ளிட்ட தலைமை விருந்தினர்கள் சாதனையை மேற்பார்வை செய்தனர். முன்னதாக இந்த சாதனை நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்தோரை டாக்டர் லட்சுமி சம்யுக்தா மற்றும் அணில் குமார் ஆகியோர் வரவேற்றனர்.