சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஓரம் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள்!

சென்னை கோவளத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை அருகே மிஷன் ரூமி-2024 திட்டத்தின் கீழ் "ரூமி ஒன்", என்ற ராக்கெட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் மூன்று செயற்கை கோள்களை விண்ணில் அனுப்பியது. ரூமி ஒன் என்ற ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தடைக்கப்பட்ட முதல் மறு பயன்பாட்டு பாக்கெட் ஆன ரூமி ஒன் மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டதை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பார்க்கும் வண்ணம் பட்டிபுலம் அருகே பிரத்தியேக மேடை அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழா வில் பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்ஜரபு ராம் மோகன், தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் லீமா ரோஸ் மார்ட்டின், மார்ட்டின் குரூப் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வித்யா வர்த்தகாஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஜி.வி. நவீன் பிரகாஷ், உதவி பேராசிரியர் டாக்டர் பி. வினோத், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி மற்றும் விஞ்ஞானிகள், முக்கிய பிரமுகர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் அறிவியல் சார்பு பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.