சென்னை கலக்கும் இரும்பு கம்பி திருடன் ராஜ்குமார் இன்று பல கோடிக்கு அதிபதி ஆனது எப்படி????

அரசு ஒப்பந்த பணிக்கு செல்லும் இரும்பு கம்பியை திருடி கொள்ளையடிக்கும் பழைய பேப்பர் வியாபாரி ராஜ்குமார் வேடிக்கை பார்க்கும் காவல்துறை. சென்னை கும்மிடிப்பூண்டி ஏ,ஆர்,எஸ் இரும்பு கம்பி தொழிற்சாலை, புதுவாயல் காமாட்சி இரும்பு கம்பி ஆலை,புதுவாயல் ஜி,பி,ஆர் இரும்பு கம்பி ஆலை,ஆந்திரா மாநிலம் திருமலா இரும்பு கம்பி ஆலை, கும்மிடிப்பூண்டி சூர்ய தேவ் இரும்பு கம்பி ஆலை சென்னை கும்மிடிப்பூண்டி புதுவாயல் முதல் சோழவரம் வரை மணலி புதுநகர், மணலி ஆண்டர்குப்பம்,விச்சூர்,ஆவடி உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஒப்பந்த பணிக்கும் , தனியார் ஒப்பந்தம் பணிக்கும் மற்றும் டிரேடர்ஸ்க்கு செல்லும் இரும்பு கம்பிகளை திருடிவிட்டு அதற்கு பதில் மண் மூட்டை , பாரங்கற்கள் மற்றும் இரும்பு கழிவுகள் போன்றவைகளை வைத்து திருடி தொழில் செய்து வருகிறார். மேலும் கட்டிட பணி நடக்கும் ஒப்பந்த பணி மேலாளர்களை சரி செய்து முழு லோடுகளையும் ஆட்டை போடுவதும் உண்டு தூத்துக்குடி பேயன்விளை சேர்ந்த ராஜ்குமார் திருடி நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். கடந்த ஐந்து வருடமாக கோடிக்கணக்கில் சம்பாதித்த பழைய பேப்பர் வியாபாரி ராஜ்குமார் தனது திருட்டுத் தொழிலை தமிழகம் மற்றுமன்றி ஆந்திரா, கர்நாடகா ,கேரளா, மகாராஷ்டிரா பகுதிகளுக்கும் விரிவடைந்து வருகிறார். திருட்டுத் தொழிலில் சுலபமாக கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ராஜ்குமார் இனி பல்வேறு மூலப்பொருட்களையும் திருட தனது ஆட்களை தயார் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தின் வறுமை காரணமாக சாதாரண குப்பை பொறுக்கும் தொழில் தொடங்கிய ராஜ்குமார் இன்று பல கோடி அதிபதி ஆனது எப்படி என்று வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். திருடன் ராஜகுமாரை கைது செய்து திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் அரசு மற்றும் தனியார் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தரமான அரசு ஒப்பந்த பணிகளும் கட்டிடப் பணிகளும் நடைபெறும், இல்லை என்றால் தரமற்ற மூலப் பொருட்கள் மூலம் நடைபெறும் பணிகளால் விரைவில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு பல பேர் உயிரை குடித்து விடும் என்பது உண்மை. திருட்டு கம்பெனி தொழிலில் போட்டி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புறத்தை சேர்ந்த மதன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருட்டு தொழிலை தடுக்கவில்லை என்றால் பல்வேறு கொலைகளும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இரும்பு கம்பி திருடி கொள்ளையடிக்கும் பழைய பேப்பர் வியாபாரி ராஜ்குமார் சட்ட ஒழுங்கு சவால் வேடிக்கை பார்க்குமா காவல்துறை.